தேசிய செய்திகள்

இமாசல பிரதேசம்: எய்ம்ஸ் மருத்துவமனை மீது நிலச்சரிவு; தொழிலாளர் உயிரிழப்பு + "||" + Himachal Pradesh: Landslide on AIIMS Hospital; Labor casualties

இமாசல பிரதேசம்: எய்ம்ஸ் மருத்துவமனை மீது நிலச்சரிவு; தொழிலாளர் உயிரிழப்பு

இமாசல பிரதேசம்:  எய்ம்ஸ் மருத்துவமனை மீது நிலச்சரிவு; தொழிலாளர் உயிரிழப்பு
இமாசல பிரதேசத்தில் கட்டுமான பணியில் இருந்த எய்ம்ஸ் மருத்துவமனை மீது நிலச்சரிவு ஏற்பட்டதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.


பிலாஸ்பூர்,


இமாசல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் கொதிபுரா பகுதியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணி நடந்து வந்துள்ளது.  இதில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையின் குறிப்பிட்ட பகுதியில் திடீரென நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டு உள்ளது.  இதில் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.  மற்றொருவர் காயமடைந்து உள்ளார்.  அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளார்.  அவர்கள் இருவரும் ஜார்க்கண்ட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.  இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது என டி.எஸ்.பி. கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. பெண் வழக்கறிஞருக்கு பட்டப்பகலில் நடுரோட்டில் அடி, உதை; வைரலான வீடியோ
கர்நாடகாவில் பெண் வழக்கறிஞரை பட்டப்பகலில் நடுரோட்டில் நபர் ஒருவர் அடித்து, மிதிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
2. 2 முறை கொரோனா பாதிப்பு, பணி சுமை; உயிரிழந்த மருத்துவ மாணவி
தெலுங்கானாவில் 2 முறை கொரோனா பாதித்த மருத்துவ மாணவி ஹாஸ்டல் விடுதியில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
3. டெல்லி தீ விபத்து: 28 பேர் மாயம் என புகார்; சம்பவ பகுதிக்கு கெஜ்ரிவால் நேரில் வருகை
டெல்லியில் 4 அடுக்கு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று நேரில் சென்று பார்வையிடுகிறார்.
4. காஷ்மீர் என்கவுண்ட்டர்; பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டு கொலை
காஷ்மீர் என்கவுண்ட்டரில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்க பயங்கரவாதி உள்பட 2 பேர் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
5. ரஷியாவில் சிறுவர் பள்ளியில் துப்பாக்கி சூடு; 2 குழந்தைகள், பெண் உயிரிழப்பு
ரஷியாவில் சிறுவர் பள்ளியில் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் பணியாளர் உயிரிழந்து உள்ளனர்.