மோடியை அடித்து விடுவேன் என சர்ச்சை பேச்சு: நானா படோலேவுக்கு எதிராக போராட்டம்


மோடியை அடித்து விடுவேன் என சர்ச்சை பேச்சு: நானா படோலேவுக்கு எதிராக போராட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2022 2:42 PM GMT (Updated: 2022-01-18T20:12:30+05:30)

மராட்டிய காங்கிரஸ் தலைவரான நானா படோலேயை கண்டித்து மும்பை, தானேயில் பா.ஜனதாவினர் போராட்டம் நடத்தினர்.

மும்பை,

மராட்டிய காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே மோடியை அடித்து விடுவேன் எனவும், அவரை என்னால் வார்த்தைகளால் கேவலப்படுத்த முடியும் என கூறும் வீடியோவை சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் அவரது சமூகவலைதள பக்கத்தில் பதிவேற்றி இருந்தார்.

 இதுகுறித்து விளக்கம் அளித்த நானா படோலே, "நான் பிரதமர் மோடியை பற்றி பேசவில்லை. பண்டாரா மாவட்டத்தில் உள்ளூர் ரவுடி பற்றி அப்பகுதி பொது மக்களிடம் பேசினேன். " என கூறியிருந்தார். இந்தநிலையில் நானா படோலேயை கண்டித்து இன்று மும்பை, தானே, கல்யாண், நாலச்சோப்ரா, தகானு உள்ளிட்ட பகுதிகளில் பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


Next Story