மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 Jan 2022 11:01 AM GMT (Updated: 2022-01-20T16:31:28+05:30)

மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி. 

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசில் வடகிழக்கு பிராந்தியத்தின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் மேம்பாட்டுத்துறை மந்திரியாக பதவி வகிப்பவர் கிஷன் ரெட்டி.

இந்நிலையில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “லேசான அறிகுறிகளுடன் இன்று நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவையான அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கிஷன் ரெட்டி பதிவிட்டுள்ளார். Next Story