நாட்டில் 15-18 வயதினருக்கு செலுத்திய தடுப்பூசி 52% ஆக உயர்வு


நாட்டில் 15-18 வயதினருக்கு செலுத்திய தடுப்பூசி 52% ஆக உயர்வு
x
தினத்தந்தி 20 Jan 2022 11:28 AM GMT (Updated: 20 Jan 2022 11:59 AM GMT)

நாடு முழுவதும் இதுவரை 15 முதல் 18 வயது உடையவர்களுக்கு 52% தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.



புதுடெல்லி,



இந்தியாவில், 2021ம் ஆண்டு ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின.  இதன்பின்பு, 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 3ந்தேதி முதல், நாடு முழுவதும் 15 முதல் 18 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.  இதன்படி, கடந்த 17 நாட்களில் நாட்டில் 52% தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.

இவற்றில் ஆந்திர பிரதேசம் (91%), இமாசல பிரதேசம் (83%), மத்திய பிரதேசம் (72%) ஆகியவை முதல் 3 இடத்தில் உள்ளன.  தமிழகத்தில் இதுவரை 58% தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.


Next Story