மராட்டியத்தில் புதிதாக 44 பேர் கொரோனாவுக்கு பலி


மராட்டியத்தில் புதிதாக 44 பேர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 23 Jan 2022 3:57 PM GMT (Updated: 2022-01-23T21:27:49+05:30)

மராட்டியத்தில் இன்று புதிதாக 40 ஆயிரத்து 805 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

மும்பை,

மராட்டியத்தில் இன்று  புதிதாக 40 ஆயிரத்து 805 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் நோய் பாதிப்பில் இருந்து 27 ஆயிரத்து 377 பேர் மட்டும் குணமானார்கள். மாநிலத்தில் இதுவரை 75 லட்சத்து 7 ஆயிரத்து 225 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 70 லட்சத்து 67 ஆயிரத்து 995 பேர் குணமாகி உள்ளனர். 

தற்போது மாநிலத்தில் 2 லட்சத்து 93 ஆயிரத்து 305 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 20 லட்சத்து 86 ஆயிரத்து 24 பேர் வீடுகளிலும், 3 ஆயிரத்து 373 பேர் தனிமைமையங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதேபோல  மாநிலத்தில் 44 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை 1 லட்சத்து 42 ஆயிரத்து 115 பேர் உயிரிழந்து உள்ளனர். மாநிலத்தில் புதிதாக நேற்று யாருக்கும் ஒமைக்ரான் கண்டறியப்படவில்லை.

Next Story