உத்தரப்பிரதேசம்: 6 வயது சிறுவனை கொன்ற சிறுத்தை!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Jan 2022 11:59 PM GMT (Updated: 2022-01-24T05:29:24+05:30)

உ.பி.யின் கதர்னியா வனவிலங்கு சரணாலயம் அருகில் 6 வயது சிறுவன் சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தான்.

பக்ரைச்,

உத்தரப்பிரதேச மாநிலம் கதர்னியா வனவிலங்கு சரணாலயத்தின் மோதிபூர் மலைத்தொடரில் ஆறு வயது சிறுவன் சாஹில் தனது வீட்டிற்கு வெளியே சில குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த சிறுத்தை ஒன்று அச்சிறுவனின் கழுத்தை கவ்வியது.

இதனை கண்ட அங்கிருந்த கிராம மக்கள் கூச்சலிட்டனர். இதனால், அச்சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு காட்டை நோக்கி ஓடியது. சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன் பறிதாபமாக உயிரிழந்தான்.

இதையடுத்து மோதிபூரில் மனிதர்களை தாக்கும் சிறுத்தைப்புலி ஒன்று பிடிபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story