இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்கும் பிலிப்பைன்ஸ்.. ஒப்பந்தம் கையெழுத்து..!


இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்கும்  பிலிப்பைன்ஸ்.. ஒப்பந்தம் கையெழுத்து..!
x
தினத்தந்தி 28 Jan 2022 11:15 AM GMT (Updated: 2022-01-28T16:57:33+05:30)

இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது


பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் கடற்படைக்கு வழங்குகிறது இந்தியா . இந்தியாவிடம் இருந்து ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் வாங்குவதற்கான  ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது .
 
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு 375 மில்லியன்  டாலர் மதிப்பில் பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது .

பிரம்மோஸ் ஏவுகணைகளை ,போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவ முடியும். இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை என முப்படையிலும் ‘பிரம்மோஸ்’ ஏவுகணைகள் செயல்பாட்டில் உள்ளன 


Next Story