பஜ்ரங்தள் பிரமுகர் கொலை வன்முறை வெடித்தது மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு,பஸ்கள் மீது தாக்குதல்
பஜ்ரங்தள் பிரமுகர் கொலை தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைப்பு, கடைகள், பஸ்- கார்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
பெங்களூரு
கர்நாட க மாநிலம், சிவமொக்கா நகரை சேர்ந்தவர் ஹர்ஷா(வயது 24). பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த இவரை நேற்று இரவு சிலர் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தனர்.
இச்சம்பவம் சிவமொக்கா நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பதட்டத்தை தணிக்க சிவமொக்கா நகரில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கொலையான ஹர்ஷாவின் உடல் ஆஸ்பத்திரியில் இருந்து வீட்டுக்கு ஊர்வலமாக இன்று காலை கொண்டு செல்லப்பட்டது. இதில் இந்து அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ஒரு கட்டத்தில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் சி.வி. நகர் பகுதியில் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென கடைகள், பஸ், கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதனால், சிவமொக்கா நகரில் மேலும், பதட்டம் அதிகரித்தது. பதட்டத்தை தணிக்க நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், ஹர்ஷாவை கொலை செய்தவர்களில் 2 பேரை சிவமொக்காவிலும், மங்களூரில் ஒருவரையும், பெங்களூருவில் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story