சரத்யாதவ் அரசு பங்களாவை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


சரத்யாதவ் அரசு பங்களாவை 15 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 March 2022 11:50 PM GMT (Updated: 15 March 2022 11:50 PM GMT)

ஐக்கிய ஜனதா தள முன்னாள் தலைவர் சரத்யாதவ், மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

புதுடெல்லி, 

ஐக்கிய ஜனதா தள முன்னாள் தலைவர் சரத்யாதவ், மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து அரசு பங்களாவில் வசித்து வந்தார்.

இது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி (பொறுப்பு) விபின் சங்கி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள், நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும், அவருக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை வைத்திருப்பது முறையாக இருக்காது. எனவே அரசு பங்களாவை 15 நாட்களுக்குள் காலி செய்ய சரத் யாதவுக்கு உத்தரவிடுகிறோம் என தெரிவித்தனர்.

Next Story