ராமர் கோவில் கட்டுமானத்திற்காக ராஜஸ்தானில் செதுக்கப்பட்ட கற்கள் அயோத்தியை வந்தடைந்தன


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 April 2022 4:15 PM GMT (Updated: 5 April 2022 4:15 PM GMT)

ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்காக ராஜஸ்தானில் செதுக்கப்பட்ட இளஞ்சிவப்பு கற்கள் இன்று அயோத்தியை வந்து சேர்ந்தது.

அயோத்தி,

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவிலின் கட்டுமானப்பணிக்காக ராஜஸ்தானின் பன்சி பஹர்பூரில் வெட்டப்பட்ட இளஞ்சிவப்பு கற்கள் இன்று அயோத்தியை வந்து சேர்ந்தது.

இந்த தகவலை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் 15 அறங்காவலர்களில் ஒருவரான அனில் மிஸ்ரா தெரிவித்தார். ஜூன் மாத இறுதிக்குள் ராமர் கோயிலின் சுவர்களுக்குப் பயன்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். 

இந்த இளஞ்சிவப்பு கல் அடுக்குகள் செம்பு பட்டைகள் மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்படும் என்று கூறிய அவர், இதற்காக இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் வழங்கிய 35 ஆயிரம் செப்பு பட்டைகள் ராம ஜென்மபூமி வளாகத்தை அடைந்துள்ளன, என்றார்.

ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாகவும், வரும் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் பிரமாண்ட கோயிலின் கருவறையில் ஸ்ரீ ராமர்  சிலை நிறுவப்படும் என்றும் மிஸ்ரா கூறினார்


Next Story