மும்பையில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு


மும்பையில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 April 2022 9:31 PM IST (Updated: 20 April 2022 9:31 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. புதிதாக 98 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு சரிந்து வந்ததால் பொதுமக்கள் இ்யல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். தலைநகர் மும்பையிலும் பாதிப்பு வெகுவாக தணிந்து இருந்தது.  இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து உள்ளது. அதாவது புதிதாக 98 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

சுமார் 9 ஆயிரத்து 514 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், இந்த முடிவு வெளியாகி உள்ளது. நேற்று 83 பேரும், அதற்கு முந்தைய நாள் 34 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதேநேரத்தில் இன்று புதிதாக யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை. 73 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இன்னும் 415 பேர் நகரில் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்


Next Story