ஒற்றுமையே நமது பலம் - மம்தா பானர்ஜி


ஒற்றுமையே நமது பலம் - மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 21 April 2022 7:19 PM IST (Updated: 21 April 2022 7:19 PM IST)
t-max-icont-min-icon

'நாங்கள் மக்களை ஒன்றிணைக்கவே விரும்புகிறோம்' என்றும், 'ஒற்றுமையே நமது முக்கிய பலம்' என மேற்குவங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா,

இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது: 

நாங்கள் எதையும் தகர்க்க விரும்பவில்லை. மக்களை பிளவுப்படுத்த விரும்பவில்லை, மக்களை ஒன்றிணைக்கவே விரும்புகிறோம். ஒற்றுமையே நமது முக்கிய பலம்.  நாம் ஒற்றுமையாக இருந்தால் கலாச்சார ரீதியாக நாம் மிகவும் அழகாக இருப்போம். நமது ஒற்றுமை பிரிந்தால் அது வீழ்ச்சியடைவோம். 

2022ம் ஆண்டு உலக வர்த்தக உச்சி மாநாட்டின் போது மொத்தம் 137 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 

இதன்மூலம் ரூ.3,42,375 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் மேற்குவங்கத்தில் மேலும் 40 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story