குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன்
இரண்டாம் முறையாக கைதான குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு அசாம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அகமதாபாத்,
பிரதமர் நரேந்திர மோடி குறித்து டுவிட்டரில் கருத்து அவதூறாக பதிவிட்டதாக குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு எதிராக அசாம் மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் அருப் குமார் டே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து, கடந்த 20 ஆம் தேதி ஜிக்னேஷ் மேவானி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அசாம் மாநில போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர். இரு பிரிவினரிடையே பகைமையை ஊக்குவித்தல், அமைதியை சீர்குலைக்கும் வகையில் உள்நோக்கத்துடம் அவமதித்தல், சதிச் செயல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இதனிடையே, அசாம் நீதிமன்றம் ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் வழங்கியது. அவர் ஜாமீனில் வெளி வந்த நிலையில், மீண்டும் அசாம் போலீசார் அவரை கைது செய்யப்பட்டார். அதிகாரிகளை தாக்கியதாக பதிவான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதனை பரிசீலித்த நீதிமன்றம், ஜிக்னேஷ் மோவானிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
முன்னதாக கைதுசெய்யப்பட்டபோது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஜிக்னேஷ் மேவானி, ” பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சதி காரணமாகவே நான் கைது செய்யப்பட்டுள்ளேன். திட்டமிட்டு இதுபோன்ற நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுகின்றனர். ரோகித் வெமுலா மற்றும் சந்திரசேகர் ஆசாத்திற்கு இதேபோன்று நடந்தது. தற்போது என்னை குறிவைத்துள்ளனர்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story