பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோனில் 10 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!


பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோனில் 10 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!
x
தினத்தந்தி 10 May 2022 10:58 AM IST (Updated: 10 May 2022 10:58 AM IST)
t-max-icont-min-icon

10 கிலோ ஹெராயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் ஆளில்லா டிரோனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்.

சண்டிகர்,

பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் மாநிலத்திற்குள் நுழைய முயன்ற டிரோனை எல்லை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஆளில்லா டிரோன் ஒன்று இந்திய எல்லை பகுதிக்குள் வந்து கொண்டிருந்தது. நேற்று இரவு 11.15 மணி அளவில் டிரோன் பறக்கும் சப்தத்தை கேட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கியால் 9 முறை சுட்டதாக தெரிவித்தனர்.

அதன் பின்னர் நடத்திய தேடுதலின் போது, டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்த முயன்றதும், அந்த் டிரோனில் 10 கிலோ ஹெராயின் இருந்ததும் தெரியவந்தது.

Next Story