தேசத்துரோக வழக்குகளின் நிலை என்னவாகும்? - பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 11 May 2022 2:16 AM IST (Updated: 11 May 2022 2:16 AM IST)
t-max-icont-min-icon

நிலுவையில் உள்ள தேசத்துரோக வழக்குகளின் நிலை என்னவாகும் என்பது குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி, 

கர்நாடகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி. ஒம்பத்கரே சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ‘தேசத்துரோக சட்டம் 124-ஏ பிரிவு அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்பதால், அதை ரத்துசெய்ய வேண்டும்’ என கோரியிருந்தார். 

இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனு தொடர்பாக நேற்று நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டதை குறிப்பிட்டு வாதிட்டார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல் ஆட்சேபம் தெரிவித்தார்.

மத்திய அரசின் யோசனையை ஏற்ற நீதிபதிகள், ‘நிலுவையில் உள்ள, எதிர்காலத்தில் பதிவு செய்யப்படும் தேசத்துரோக வழக்குகளின் நிலை என்னவாகும்?’ என்பது குறித்து 11-ந்தேதிக்குள் (இன்று) பதில் அளிக்க மத்திய அரசுக்கு கெடு விதித்து உத்தரவிட்டனர்.

Next Story