முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: ராகுல் காந்தி

முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 13 May 2022 4:52 PM IST (Updated: 13 May 2022 4:52 PM IST)
t-max-icont-min-icon

முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என வயநாடு தொகுதி எம்.பி ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என  வயநாடு தொகுதி எம்.பி ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

முதுகலை நீட் நுழைவுத் தேர்வு வருகிற மே 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. நீட் முதுகலை 2021ஆம் ஆண்டுக்கான கவுன்சிலிங் தாமதமாக நடைபெற்றதால் மாணவர்கள் தேர்வை ஒத்தி வைக்குமாறு கோரிக்கை விடுத்துவருகின்றனர். மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நீட் தேர்வை தள்ளிவைக்க வேண்டும் எனஇந்திய மருத்துவ சங்கம் மத்திய சுகாதார துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியாவுக்கு கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது. கவுன்சிலிங் தாமதத்திற்கு விண்ணப்பதாரர்கள் பொறுப்பல்ல.  கொரோனா காலத்தில் மக்களுக்கு சேவையாற்றியவர்களை, அரசு துன்புறுத்தாமல் அவர்களின் கோரிக்கையை கேட்டு நீதியை நிலைநாட்ட வேண்டும்” எனப்பதிவிட்டுள்ளார். 

Next Story