ஜார்கண்டில் யானை மிதித்து 4 பேர் உயிரிழப்பு - 2021-22ல் மட்டும் 133 பேர் உயிரிழப்பு


ஜார்கண்டில் யானை மிதித்து 4 பேர் உயிரிழப்பு - 2021-22ல் மட்டும் 133 பேர் உயிரிழப்பு
x

கோப்புப்படம்

ஜார்கண்ட் மாநிலத்தில், யானை மிதித்ததில் மூன்று பெண்கள் உட்பட, நான்கு பேர் உயிரிழந்தனர்.

ராஞ்சி,

ஜார்கண்ட் மாநிலம், லோகர்டகா மாவட்டத்தில், யானை மிதித்ததில் மூன்று பெண்கள் உட்பட, நான்கு பேர் உயிரிழந்தனர்.

குடு காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை 50 வயது பெண் ஒருவர் யானை மிதித்து உயிரிழந்தார். மேலும் பாந்த்ரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் இன்று காலையில் 3 பேர் யானை தாக்கியதில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பாந்த்ராவிற்கும் குடுவிற்கும் இடையிலான தூரம் சுமார் 25 கிலோ மீட்டர் தான் என்பதால் நான்கு பேரும் ஒரே யானையால் உயிரிழந்திருக்கலாம். இருப்பினும், இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று லோகர்டகா வன அதிகாரி அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25,000 உடனடி நிவாரணம் வழங்கப்படும் என்றும், அரசு நடைமுறைகளை முடித்த பின்னர் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 3.75 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜார்க்கண்டில் 2021-22-ல் யானை தாக்கியதில் 133 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 2017-ம் ஆண்டு முதல் கடந்த ஐந்து ஆண்டுகளில் 462 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story