கொல்கத்தாவில் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேர் பலி..!!
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் டெங்கு காய்ச்சலுக்கு 6 பேர் பலியாகினர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளம் கொல்கத்தாவில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் பச்சிம் மேதினிபூரில் 2 பேர் உயிரிழந்தனர், காரக்பூரில் இரண்டு பேர் இறந்தனர்.
கடந்த சில நாட்களில் டெங்குவால் பாதிக்கப்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு மட்டும் டெங்கு பாதிப்பால் 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கேரளாவிலிருந்து திரும்பிய ஒரு தொழிலாளி பெலியாகட்டா ஐடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி உள்ளனர்.