கடந்த 2021-ம் ஆண்டில் கர்நாடகத்தில் 79 காட்டு யானைகள் சாவு


கடந்த 2021-ம் ஆண்டில்  கர்நாடகத்தில் 79 காட்டு யானைகள் சாவு
x

கடந்த 2021-ம் ஆண்டில் கர்நாடகத்தில் 79 காட்டு யானைகள் செத்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு: கர்நாடகத்தில் கடந்த ஆண்டு (2021) காட்டு யானைகள் சாவு குறித்து வனத்துறையினர் சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பின்படி கடந்த ஆண்டு மட்டும் கர்நாடகத்தில் 79 காட்டு யானைகள் செத்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இவற்றில் 17 யானைகள் இயற்கைக்கு மாறான முறையில் செத்திருப்பதும் தெரியவந்துள்ளது. மின்சாரம் தாக்கி 12 யானைகள் செத்திருப்பதாகவும், பெரும்பாலும் யானைகள் உடல் நலக்குறைவு காரணமாக செத்திருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்னர். இதையடுத்து, இயற்கைக்கு மாறாக செத்த 17 காட்டு யானைகள் பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாநிலத்தில் அதிகபட்சமாக நாகரஒலே வனப்பகுதியிலும், மலை மாதேஸ்வரா பகுதியிலும் தான் காட்டு யானைகள் செத்திருப்பது தெரியவந்துள்ளது.


அந்த 2 வனப்பகுதியிலும் தலா 14 காட்டு யானைகள் செத்துள்ளன. காவேரி வனப்பகுதியில் 12 யானைகளும், பந்திப்பூர் வனப்பகுதியில் 10 யானைகளும், பிளிகிரிரங்கணபெட்டா ரெசார்ட் பகுதியில் 9 யானைகளும், மடிகேரியில் 4 யானைகளும், விராஜ்பேட்டையில் 5 யானைகளும், ஹாசனில் 4 யானைகளும், ராமநகரில் 3 யானைகளும், பன்னரகட்டாவில் 2 யானைகளும், பத்ரா, சிக்கமகளூருவில் தலா ஒரு காட்டு யானைகளும் கடந்த ஆண்டு இறந்திருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story