துருக்கி, சிரியாவுக்கு இந்தியாவின் நிவாரண பொருட்களுடன் 7-வது விமானம் சென்றடைந்தது


துருக்கி, சிரியாவுக்கு இந்தியாவின் நிவாரண பொருட்களுடன் 7-வது விமானம் சென்றடைந்தது
x
தினத்தந்தி 12 Feb 2023 9:15 PM GMT (Updated: 12 Feb 2023 9:16 PM GMT)

‘ஆபரேஷன் தோஸ்த்’ என்ற பெயரில் இந்திய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதுடெல்லி,

பயங்கர நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ள துருக்கி மற்றும் சிரியாவில் 'ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் இந்திய பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தவிர அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. உணவு பொருட்கள், மருந்துகள், போர்வைகள் என ஏராளமான பொருட்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

மேலும் ஏராளமான நிவாரண பொருட்களுடன் 7-வது இந்திய விமானப்படை விமானம் நேற்று இரு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் சோலார் விளக்குகள், அவசர கால மருந்துகள் உள்பட 35 டன் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதில் 23 டன் பொருட்கள் சிரியா தலைநகர் டமாஸ்கசுக்கும், 12 டன் பொருட்கள் துருக்கிக்கும் வழங்கப்பட்டன. இந்தியா அனுப்பிய பொருட்களை டமாஸ்கசில், அந்த நாட்டு உள்ளாட்சி மற்றும் சுற்றுச்சூழல் துணை மந்திரி மவுதாஸ் டவாஜி பெற்றுக்கொண்டார்.

இந்த தகவலை மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்தார்.


Next Story