10 மாதத்தில் 8 ராணுவ விமான விபத்து.. 4 விமானி, 9 ராணுவத்தினர்.. அதிர்ச்சியூட்டும் பின்னணி!..


10 மாதத்தில் 8 ராணுவ விமான விபத்து.. 4 விமானி, 9 ராணுவத்தினர்.. அதிர்ச்சியூட்டும் பின்னணி!..
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 8 May 2023 10:42 PM IST (Updated: 9 May 2023 4:27 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் கடந்த10 மாதத்தில் 8 ராணுவ விமான விபத்துக்கள் ஏற்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

2022 ஜூலை 28ல், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில், மிக்-21 பயிற்சி விமான விழுந்து நொறுகியதில், இரண்டு விமானிகள் பலியாகினர்.

2022 அக்டோபர் 5ல், அருணாச்சல பிரதேசத்தின் தாவாங் பகுதியில், இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிக்காப்டர் விபத்துக்குள்ளானதில், ஒரு விமானி உயிரிழந்தார். மற்றொருவர் படு காயமடைந்தார்.

2022 அக்டோபர் 12ல், கோவா கடல் பகுதியில், இந்திய விமானப் படையின் மிக் - 29கே போர் விமானம் விழுந்து நொருங்கியது. இதன் விமானி பத்திரமாக மீட்கப்பட்டார்.

2022 அக்டோபர் 21ல், அருணாச்சல பிரதேசத்தின் மிக்கிங் மலைப் பகுதியில், இந்திய ராணுவத்தின் துருவ் ஹெலி காப்டர் விபத்துக்குள்ளானதில், இரண்டு விமானிகள் உள்பட ஐந்து ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

2023 ஜனவரி 28ல், ராஜஸ்தானின் பரத்பூரில், சுக்கோய் 30 போர் விமானமும், மிராஜ் - 2000 போர் விமானமும் மோதி, விபத்துக்குள்ளானதில், ஒரு விமானி உயிரிழந்தார்.

மார்ச் 26ல், கொச்சின் விமான நிலையத்தில், இந்திய கடலோர காவல் படையின் துருவ் ஹெலிக்காப்டர் விழுந்து நொறுங்கியதில் மூன்று விமானிகள் காயமடைந்தனர்.

மே 4ல், ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வர் பகுதியில், இந்திய ராணுவத்தின் துருவ் ஹெலிக்காப்டர் விபத்துக்குள்ளானதில், ஒரு ராணுவ வீரர் பலியானார். இரண்டு விமானிகள் படுகாயமடைந்தனர்.

மே 8ல், ராஜஸ்தானின் ஹனுமங்கரில், மிக்-21 போர் விமானம், ஒரு வீட்டின் மீது விழுந்து நொறுங்கியதில், மூன்று பேர் பலியாகினர். போர் விமானி பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கினார்.


Next Story