5 ஆண்டுகளில் இந்திய குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியர்கள் 87 சதவீதம்


5 ஆண்டுகளில் இந்திய குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியர்கள் 87 சதவீதம்
x

பாகிஸ்தானில் இருந்து வந்த 87% பேருக்கு கடந்த 5 ஆண்டுகளில் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

மத்திய உள்விவகார அமைச்சகத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு கிடைத்துள்ள பதிலில், கடந்த 5 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்து வந்த 87% பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் (2017 முதல் 2022 வரை), 5,220 வெளிநாட்டவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது. அவர்களில் 4,552 பேர் பாகிஸ்தானியர்கள் ஆவர்.

எனினும், கடந்த நவம்பரில் மக்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் கூறும்போது, 5 ஆண்டுகளில் 6 லட்சத்து 8 ஆயிரத்து 162 பேர் இந்திய குடியுரிமையை சரண்டர் செய்துள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

இதன்படி, ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 1 லட்சத்து 21 ஆயிரத்து 632 பேர் இந்திய குடியுரிமையை வேண்டாம் என கைவிடுகின்றனர். ஆனால், 5 ஆண்டுகளில் சராசரியாக 1,044 பேரே இந்திய குடியுரிமையை பெற்றுள்ளனர்.

அமெரிக்க குடியுரிமையை பெறுவதே இந்தியர்களில் பலரது விருப்பம் ஆகவுள்ளது. இதேபோன்று மறுமுனையில் இந்திய குடியுரிமை பெறும் அமெரிக்கர்களும் உள்ளனர். ஆனால், அது மிக சிறிய எண்ணிக்கையில் உள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 71 அமெரிக்கர்களே இந்திய குடியுரிமையை பெற்றுள்ளனர். அதேவேளையில், பாகிஸ்தான் (87%), ஆப்கானிஸ்தான் (8%) மற்றும் பங்களாதேஷ் (2%) ஆகிய 3 நாடுகளை சேர்ந்த குடிமக்களும் இந்திய குடியுரிமை பெற்றவர்களில் டாப் 3ல் உள்ளனர்.

இதேபோன்று கடந்த 5 ஆண்டுகளில் 2021ம் ஆண்டிலேயே, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்திய குடியுரிமையை பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டில் 1,745 பேருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் 1,580 விண்ணப்பதாரர்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர்.


Next Story