டாக்டரின் நல்ல அணுகுமுறை நோயாளிகளின் பாதி நோயை தீர்த்து விடும்: யோகி ஆதித்யநாத்


டாக்டரின் நல்ல அணுகுமுறை நோயாளிகளின் பாதி நோயை தீர்த்து விடும்:  யோகி ஆதித்யநாத்
x

உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், நோயாளிகளை இரக்கத்துடன் நடத்தும்படி டாக்டர்களை கேட்டு கொண்டார்.

கோரக்பூர்,

உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகரில் ரத்த வங்கி மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையின் அரங்கத்தில் 10 படுக்கை வசதிகள் கொண்ட டயாலிசிஸ் பிரிவு ஒன்றையும் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று தொடங்கி வைத்து பேசினார்.

இந்த வசதிகள் பொதுமக்களுக்கான ஒரு பரிசு என கூறிய அவர், நோயாளிகளை இரக்கத்துடன் நடத்தும்படி டாக்டர்களை கேட்டு கொண்டார். நேர்மறையான போட்டியாளர்களாக இருப்பதுடன், தொடர் ஆய்விலும் ஈடுபடும்படி கூறினார்.

அவர் தொடர்ந்து கூறும்போது, எதிர்மறையானது ஒருபோதும் யாரையும் முன்னோக்கி செல்ல விடாது. மற்றவர்களை கீழே இழுத்து விட முயற்சிப்பவர்கள், அவர்களுடைய சொந்த செயல்களாலேயே வீழ்பவர்களாக இருக்கின்றனர். இதற்கு பதிலாக, நேர்மறையானது எப்போதும் வளர்ச்சிக்கான பாதையை காட்டும்.

எதிர்மறை சிந்தனையை கொண்ட டாக்டரால், நோயாளிக்கு சிறந்த சிகிச்சையை ஒருபோதும் வழங்க முடியாது. மனிதஇனத்திற்கான சேவையுடன் தொடர்புடையவர்கள் டாக்டர்கள் என எப்போதும் அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார். டாக்டரின் நல்லவித அணுகுமுறையாலேயே நோயாளிகளின் பாதி நோய் தீர்ந்து விடும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story