கர்நாடகாவில் காரில் பம்பருக்குள் சிக்கி 70 கிலோ மீட்டர் தூரம் வரை சென்ற நாய்
கர்நாடகாவில் காரில் பம்பருக்குள் சிக்கி 70 கிலோ மீட்டர் தூரம் வரை சென்ற நாய் சிறு காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டது.
மங்களூரு,
கர்நாடகாவில் காரில் பம்பருக்குள் சிக்கி 70 கிலோ மீட்டர் தூரம் வரை சென்ற நாய் சிறு காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டது.
மங்களூரை சேர்ந்த சுப்ரமணி என்பவருக்கு சொந்தமான கார் புத்தூருக்கு சென்றுள்ளது. அப்போது சாலையில் நாய் குறுக்கிட்டதால் காரை நிறுத்திய சுப்ரமணி நாயை தேடியுள்ளார். அங்கு நாயை காணாததால் மீண்டும் காரை இயக்கியுள்ளார்.
பின்னர் புத்தூர் சென்ற பிறகு காரை நிறுத்தியபோது, அதன் பம்பரில் நாய் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக மெக்கானிக் வரவழைக்கப்பட்டு, கார் பம்பரை கழற்றி நாய் மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story