டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவருக்கு குரங்கு அம்மை இல்லை


டெல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவருக்கு குரங்கு அம்மை இல்லை
x

நாட்டில் இதுவரை 4 பேர் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி,

டெல்லியில் காசியாபாத்தை சேர்ந்த ஒருவர் கடுமையான காய்ச்சல், உடல் புண்கள் போன்ற குரங்கு அம்மை அறிகுறிகளுடன் காணப்பட்டு, சந்தேகத்துடன் லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது மாதிரிகள், புனேயில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதன் முடிவு வந்து விட்டது. அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. அவருக்கு சின்னம்மை பாதிப்பு உள்ளதாக டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர்.

அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என்பதால் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு விட்டார் என ஆஸ்பத்திரியின் மருத்துவ இயக்குனர் சுரேஷ் குமார் தெரிவித்தார். நாட்டில் இதுவரை 4 பேர் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story