1993 தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து அப்துல் கரீம் துண்டா விடுதலை
1993-ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா விடுவிக்கப்பட்டுள்ளார்.
மும்பை,
1993-ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நேபாள எல்லையான பன்பாஸாவில் அப்துல் கரீம் துண்டாவை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த துண்டாவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தடா நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. எனினும், அவருடன் குற்றம்சாட்டப்பட்ட இர்பான் (70), ஹமீதுதீன் (44) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story