கட்சியை வழிநடத்தவும், முடிவெடுக்கவும் ஒற்றைத் தலைமை என முடிவு எடுக்கப்பட்டது - சுப்ரீம் கோர்ட்டில் இ.பி.எஸ். தரப்பு வாதம்


கட்சியை வழிநடத்தவும், முடிவெடுக்கவும் ஒற்றைத் தலைமை என முடிவு எடுக்கப்பட்டது - சுப்ரீம் கோர்ட்டில் இ.பி.எஸ். தரப்பு வாதம்
x
தினத்தந்தி 10 Jan 2023 9:39 AM GMT (Updated: 10 Jan 2023 10:18 AM GMT)

அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் தொடங்கியது.

புதுடெல்லி,

கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜனவரி 4-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

மூன்று நாட்களாக இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் அ.தி.மு.க பொதுக்குழு வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் தொடங்கியது.

ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்கிய போது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ, அதுதான் தற்போது பின்பற்றப்பட்டது. ஆனால், முன்னர் எதிர்ப்பு தெரிவிக்காத ஓ.பி.எஸ்., தற்போது ஒற்றைத்தலைமை குறித்து தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என கூறுகிறார் - இ.பி.எஸ். தரப்பு வாதம்

இரட்டை தலைமையில் ஆளுக்கொரு கருத்து இருக்கும், அப்போது ஒரு முடிவெடுக்க பல்வேறு தடுமாற்றங்கள் இருக்கும் அது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவேதான் கட்சியை வழிநடத்தவும், முடிவெடுக்கவும் ஒற்றைத் தலைமை என முடிவு எடுக்கப்பட்டது - இ.பி.எஸ். தரப்பு வாதம்

ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் அதிமுக கட்சி விதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதும் அடிப்படை தொண்டர்களால் அல்ல, மாறாக பொதுக்குழு உறுப்பினர்களால்தான் - இ.பி.எஸ். தரப்பு வாதம் முன்மொழியப்பட்டது.

இன்றைய விசாரணையின் போது, எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்கள் தொடங்கி மும்முரமாக முன் வைக்கப்பட்டு வருகிறது.


Next Story