கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு, அ.தி.மு.க. ஆதரவு
கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதாவுக்கு, அ.தி.மு.க. ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கான உத்தரவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்தார்.
இதையடுத்து பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் அவைத்தலைவர் அன்பரசன், மாநில பொருளாளர் வேடியப்பன் ஆகியோர் சென்று கர்நாடகாவில் பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு அளித்திருப்பதை முறைப்படி தெரிவித்தார்.
இதையொட்டி அவர்கள் பா.ஜனதா அலுவலகத்தில் தமிழக பா.ஜனதா தலைவரும், கர்நாடக சட்டசபை தேர்தல் பா.ஜனதா இணை பொறுப்பாளருமான அண்ணாமலை, மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்து முறைப்படி அ.தி.மு.க.வின் ஆதரவை பா.ஜனதா கட்சி தலைமைக்கு தெரிவித்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் எஸ்.டி.குமாருக்கு, தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சால்வை அணிவித்து வரவேற்றார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின் பேரில் கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக கர்நாடக அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நேற்று கூடியது.