உடல் நலம் பாதித்தவரை தொட்டில் கட்டி சிகிச்சைக்கு அழைத்து சென்ற அவலம்


உடல் நலம் பாதித்தவரை தொட்டில் கட்டி சிகிச்சைக்கு அழைத்து சென்ற அவலம்
x

உடல் நலம் பாதித்தவரை தொட்டில் கட்டி சிகிச்சைக்கு அழைத்து சென்ற அவலம் நடந்துள்ளது.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் கடபா தாலுகாவில் நுஜிபல்டிலா அருகே கல்லுகட்டேயை அடுத்து பாலக்கா என்ற சிறிய மலைக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லை. ஒத்தையடி பாதை மட்டுமே உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவசர உதவிக்கு கடபா செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சாலை வசதி ஏற்படுத்தவும், அவசர மருத்துவ உதவிக்கும் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த 70வயது மூதாட்டி ஒருவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அதாவது அவரது காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் அந்த மூதாட்டியை ஒரு பெரிய மரத்தடியில் சேலையால் தொட்டில் கட்டி தூக்கிச் சென்று 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கல்லுகுட்டே பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சாலை வசதி இல்லாததால் இந்த நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருவதாகவும், எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story