அனைத்து மாநிலங்களும் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தவேண்டும் ; உத்தரகாண்ட் முதல்-மந்திரி வேண்டுகோள்
அனைத்து மாநிலங்களும் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தவேண்டுமென உத்தரகாண்ட் முதல்-மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த குழு அமைக்கப்பட்டு வரைவு மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விரைவில் உத்தரகாண்டில் பொதுசிவில் சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், அனைத்து மாநிலங்களும் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தவேண்டுமென உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உத்தரகாண்டின் தனம் சிங் நகர் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி புஷ்கர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது; ஒவ்வொரு மாநிலங்களும் சொந்தமாக பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்தவேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்' என்றார்.
நாட்டிலேயே கோவாவில் மட்டும் தான் பொதுசிவில் சட்டம் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story