மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு - இருவர் உயிரிழப்பு


மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு - இருவர் உயிரிழப்பு
x

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் அங்கு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இம்பால்,

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து பல நாட்கள் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால், நாடு முழுக்க பரபரப்பு ஏற்பட்டது.

வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர அம்மாநிலத்தில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். ராணுவ கண்காணிப்பு மூலம் அம்மாநிலத்தில் நிலைமை மெல்ல சீராக துவங்கியது. எனினும், அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே தான் வருகிறது.

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பாதுகாப்பு படையினர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த வரிசையில், இன்று மீண்டும் அங்கு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.

இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள கௌட்ருக் என்ற கிராமத்தில் திடீர் துப்பக்கி சூடு நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்த நிலையில், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் கிராமத்தை சேர்ந்த ஒருவர் காணாமல் போனதாகவும் காவல் துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story