டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை...!


டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு தடை...!
x

காற்றின் தரம் மோசமடைவதைத் தடுக்க கட்டுமான பணிகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கட்டுமான பணிகள், தொழில்துறை செயல்பாடுகளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. காற்றின் தரம் மோசமடைவதைத் தடுக்க, கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றின் தரம் கடுமையாக மோசமடைந்துள்ளது. இன்று நடைபெற்ற கூட்டத்தில், தேசிய தலைநகரின் நிலைமை, வானிலை துறை மற்றும் காற்றின் தரக் குறியீட்டின் மதிப்பீடு செய்தது. இதனால், டெல்லி-என்சிஆர் பகுதி முழுவதும் அத்தியாவசியத் திட்டங்களைத் தவிர கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story