கேரளாவில் ரூ.75 லட்சம் லாட்டரி வென்ற வங்காளத் தொழிலாளி - பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம்


கேரளாவில் ரூ.75 லட்சம் லாட்டரி வென்ற வங்காளத் தொழிலாளி - பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம்
x

கோப்புப்படம்

கேரளாவில் ரூ.75 லட்சம் லாட்டரியை வென்ற வங்காளத்தைச் சேர்ந்த தொழிலாளி பயத்தில் பாதுகாப்பு கோரி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

திருவனந்தபுரம்,

கேரளாவில் ரூ.75 லட்சம் லாட்டரியை வென்ற வங்காளத்தைச் சேர்ந்த எஸ்.கே.படேஷ் என்ற தொழிலாளி பயத்தில் தனது பரிசுத் தொகைக்கு பாதுகாப்பு கோரி மூவாட்டுபுழா காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

லாட்டரி சீட்டு குறித்த வழக்கங்களை அறியாததால், யாரும் தன்னிடம் இருந்து டிக்கெட்டை பறித்துவிடுவார்களோ என்ற பயத்தில் போலீசாரிடம் பாதுகாப்பு கோரினார். அவருக்கு முறைப்படி அனைத்து பாதுகாப்பும் வழங்குவதாக மூவாட்டுபுழா போலீசார் உறுதியளித்தனர்.

எஸ்.கே.படேஷ் எர்ணாகுளத்தில் உள்ள சோட்டானிகராவில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த லாட்டரி டிக்கெட்டை வாங்கியுள்ளார். இந்த நிலையில் பணம் கிடைத்ததும் வங்காளத்தில் உள்ள தனது வீட்டிற்கு செல்ல அவர் முடிவு செய்துள்ளார்.

கேரளாவில் தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தால் தனது வீட்டைப் புதுப்பித்து விவசாயத்தை விரிவுபடுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story