கர்நாடக வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும்: ப.சிதம்பரம் டுவிட்


கர்நாடக வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும்: ப.சிதம்பரம் டுவிட்
x

பாஜகவின் போலி வாக்குறுதிகளில் இருந்து கர்நாடக வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கர்நாடகாவில் வரும் மே 10 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் பிரசாரம் அங்கு அனல் பறக்கும் நிலையில், முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ,போலியான இரட்டை எஞ்சின் வாக்குறுதி குறித்து கர்நாடக வாக்காளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-"மணிப்பூரில் 'இரட்டை என்ஜின் அரசு' ஆட்சியின் விளைவுகளைப் பாருங்கள். இரண்டு எந்திரங்களும் தோல்வியடைந்து விட்டன. மாநில அரசு உட்கட்சி பூசல்களால் பிளவுப்பட்டுள்ளது. அனைத்து பிரச்சினைகளுக்கும் மத்திய அரசிடம் மோசமான தீர்வுகளே உள்ளன. இதனால் கர்நாடக வாக்காளர்கள் போலியான 'இரட்டை என்ஜின் அரசு' வாக்குறுதி குறித்து கவனமாக இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.


Next Story