பீகாரில் சாதி வாரியான கணக்கெடுப்புக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு; அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டம்!


பீகாரில் சாதி வாரியான கணக்கெடுப்புக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு; அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டம்!
x

பீகாரில் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

பாட்னா,

பீகாரில் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து, பீகார் தலைமைச் செயலாளர் அமீர் சுபானி கூறியதாவது:-

சாதிவாரியான கணக்கெடுப்புக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மாநில அளவில் இது பொது நிர்வாகத் துறையால் மேற்கொள்ளப்படும். மாவட்ட அளவில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் பொறுப்பு அதிகாரிகளாக செயல்படுவார்கள். இவர்கள் இருவரும் பஞ்சாயத்து நிலை மற்றும் தொகுதி அளவிலான பொறுப்பாளர்களாக இருப்பார்கள்.

இந்த கணக்கெடுப்பின் போது, பொருளாதார ரீதியாகவும் கணக்கெடுப்பு நடத்த முயற்சி மேற்கொள்ளப்படும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த பணி நிறைவு பெறும். சாதி வாரியான கணக்கெடுப்புக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, பீகார் தலைநகர் பாட்னாவில் நேற்று அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் பாஜக, ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ-எம்எல் (விடுதலை), சிபிஐ, எச்ஏஎம் மற்றும் ஏஐஎம்ஐஎம் மற்றும் விஐபி ஆகிய ஒன்பது அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன.


இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில், அனைத்து கட்சி தலைவர்களும் ஒருமனதாக சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தனர்.

மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்வதன் மூலம் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் வளர்ச்சிக்காக அரசு பணியாற்றுவது எளிமையாக்கப்படும் என்று பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்தார்.


Next Story