சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் 19-ந்தேதி வரை நீட்டிப்பு


சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் 19-ந்தேதி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 6 Oct 2023 1:25 AM GMT (Updated: 6 Oct 2023 7:25 AM GMT)

சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் 19-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு ரூ.300 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். நேற்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றம் சந்திரபாபு நாயுடுவின் காவலை வரும் 19-ந்தேதி வரை 15 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

சந்திரபாபு நாயுடுவின் ஜாமீன் மனு மற்றும் அவரைக் காவலில் வைக்கக் கோரிய ஆந்திர மாநில சிஐடி போலீசார் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் இன்று ஒத்திவைத்தது. மேலும் சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீசார் ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளனர்.

சிஐடி போலீசார் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பி.சுதாகர் ரெட்டியும், சந்திரபாபு நாயுடு சார்பில் சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர் பிரமோத் துபேயும் வாதிட்டனர்.


Next Story