உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் வானிலையை கணிப்பதில் சிக்கல் இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்


உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் வானிலையை கணிப்பதில் சிக்கல் இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல்
x

பருவநிலை மாற்றத்தால் இந்திய பருவமழையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து கேட்கப்பட்டது.

புதுடெல்லி,

இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொகபத்ரா பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது பருவநிலை மாற்றத்தால் இந்திய பருவமழையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு அவர் பதில் அளிக்கையில், '1901-ம் ஆண்டு முதல் பருவமழையின் டிஜிட்டல் தரவு எங்களிடம் உள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் மழைப்பொழிவு குறைவதை காட்டுகின்றன. மேற்கு ராஜஸ்தான் உள்ளிட்ட மேற்கில் சில பகுதிகளில் மழைப்பொழிவு அதிகமாக உள்ளது. நாடு முழுவதையும் நாம் கருத்தில் கொண்டால் குறிப்பிடத்தக்க போக்கு எதுவும் இல்லை. அதேநேரம் பருவமழை சீரற்றது மற்றும் பெரிய அளவிலான மாறுபாடுகளைக் காட்டுகிறது' என்றார்.

மேலும் அவர், 'பருவநிலை மாற்றம் வளிமண்டலத்தில் உறுதியற்ற தன்மையை அதிகரித்துள்ளது. இது வெப்பச்சலன நடவடிக்கைகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. அரபிக்கடலில் புயல்களின் தீவிரமும் அதிகரித்து வருகிறது. தீவிர பருவநிலை நிகழ்வுகளின் அதிர்வெண் அதிகரிப்பால், உலக அளவில் வானிலையை கணிப்பதற்கு முன்னறிவிப்பாளர்களுக்கு சவாலாக உள்ளது. பருவநிலை மாற்றத்தால் அதிக மழையை கணிக்கும் திறன் தடைபடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன' என்றும் தெரிவித்தார்.


Next Story