இந்தியாவில் 92 ஆக சரிந்த தினசரி கொரோனா பாதிப்பு


இந்தியாவில் 92 ஆக சரிந்த தினசரி கொரோனா பாதிப்பு
x

இந்தியாவில் மேலும் 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 140 ஆக இருந்தது. இன்று இது 92 ஆக சரிந்தது. இதுவரையில் 4 கோடியே 49 லட்சத்து 92 ஆயிரத்து 880 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று பாதிப்பில் இருந்து 192 பேர் குணம் அடைந்தனர். தொற்றில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 58 ஆயிரத்து 639 ஆகும்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் இன்று 100 குறைந்தது. இதையடுத்து தற்போது சிகிச்சையில் 2 ஆயிரத்து 350 பேர் மட்டுமே உள்ளனர். தொற்றால் இன்று ஒருவரும் பலியாகவில்லை. இதனால் தொற்றுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 891 ஆக தொடர்கிறது.


Next Story