ஒரு டன் கரும்புக்கு ரூ.2,900 நிர்ணயிக்க கோரி முதோலில் முழு அடைப்பு போராட்டம்


ஒரு டன் கரும்புக்கு ரூ.2,900 நிர்ணயிக்க கோரி  முதோலில் முழு அடைப்பு போராட்டம்
x

ஒரு டன் கரும்புக்கு ரூ.2,900 நிர்ணயிக்க கோரி முதோலில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.

பாகல்கோட்டை: டன் கரும்புக்கு கூடுதல் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று பாகல்கோட்டை, பெலகாவி, மண்டியா ஆகிய மாவட்டங்களில் கரும்பு விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனாலும் விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இந்த நிலையில் ஒரு டன் கரும்புக்கு ரூ.2,900 விலை நிர்ணயிக்க கோரி பாகல்கோட்டை மாவட்டம் முதோலில் கரும்பு விவசாயிகள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர். அதன்படி நேற்று முதோலில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் முதோல் டவுனில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஜமகண்டி, பாதாமி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பஸ்கள் வராததால் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். நகரில் உள்ள சங்கொள்ளி ராயண்ணா சர்க்கிளில் கூடிய கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாயிகள் போராட்டத்திற்கு வக்கீல்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்து இருந்தது.

விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் முதோலில் உள்ள கர்நாடக தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானியின் வீடு மற்றும் சர்க்கரை தொழிற்சாலை முன்பு 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.




Next Story