மக்களவையில் இருந்து தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு
மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள்வையில் இருந்து தி.மு.க எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (சனிக்கிழமை) முடிவடைகிறது. இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத்தொடர் ஆகும். இதனால், பட்ஜெட் கூட்டத்தொடரில் அனல் பறக்கிறது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ராமர் கோயில் தொடர்பான 'நன்றி தெரிவிக்கும் தீர்மானம்' தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த நிலையில், மக்களவையில் இருந்து தி.மு.க எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் நலனை காக்க வில்லை எனக்கூறிய தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
Related Tags :
Next Story