நான் யாரென தெரியுமா? பிரதமர் மோடியின் கேள்விக்கு பதில் அளித்து சிரிப்பலை ஏற்படுத்திய சிறுமி


நான் யாரென தெரியுமா? பிரதமர் மோடியின் கேள்விக்கு பதில் அளித்து சிரிப்பலை ஏற்படுத்திய சிறுமி
x

நான் யார் என தெரியுமா? என்ற பிரதமர் மோடியின் கேள்விக்கு 8 வயது சிறுமி அளித்த பதிலால் சிரிப்பலை எழுந்தது.



புதுடெல்லி,



மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் தொகுதிக்கான எம்.பி.யாக இருந்து வருபவர் அனில் பிரோஜியா. பிரதமர் மோடியை சந்திப்பதற்காக அனில், தனது மனைவி, மகள் உள்ளிட்ட குடும்பத்தினரை நாடாளுமன்றத்திற்கு இன்று அழைத்து வந்துள்ளார். அனிலின் மகளான 8 வயது சிறுமி ஆஹானா பிரோஜியாவிடம், தன்னை யார் என்று தெரியுமா? என பிரதமர் மோடி கேட்டுள்ளார்.

அதற்கு அந்த சிறுமி, தெரியும். நீங்கள் மோடிஜி. உங்களை எனக்கு நன்றாக தெரியும். தொலைக்காட்சியில் உங்களை நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் மக்களவை டி.வி.க்காக வேலை பார்த்து வருகிறீர்கள் என்று பதில் அளித்து உள்ளது. இதனை கேட்ட அந்த அறையில் இருந்த அனைவரும் சிரித்து விட்டனர்.

இதன்பின்னர், சிறுமி ஆஹானாவுக்கு பிரதமர் மோடி சாக்லேட்டுகளை கொடுத்து அனுப்பினார். உடல் எடை அதிகரித்து குண்டாக காணப்பட்ட அனில் பிரோஜியா, தற்போது பெருமளவில் எடையை குறைத்துள்ளார். இதற்கு காரணம் மத்திய மந்திரி நிதின் கட்காரி.

கடந்த 5 மாதங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் இவரை வைத்து கொண்டு மேடையில் கட்காரி பேசும்போது, உங்களுடைய ஒரு கிலோ உடல் எடை குறைப்புக்கு ரூ.1,000 கோடியை வளர்ச்சி திட்ட பணிகளுக்காக வழங்குவேன் என கூறினார்.

இதனை மேடையில் வைத்து கேட்டு கொண்டிருந்த பிரோஜியா சிரித்து கொண்டார். ஆனால், கட்காரி கூறிய விசயங்களை பின்னர் சவாலாக அவர் எடுத்து கொண்டார். தொகுதி மேம்பாட்டுக்கான முயற்சியாக, 5 மாதங்களாக உடற்பயிற்சி, யோகா என பல விசயங்களை மேற்கொண்டு உள்ளார். இதுவரை அவர் 21 கிலோ எடை குறைத்துள்ளார். இதனால், அவரது தொகுதிக்காக ரூ.21 ஆயிரம் கோடி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.


Next Story