மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி


மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 26 Dec 2022 1:20 PM IST (Updated: 26 Dec 2022 1:57 PM IST)
t-max-icont-min-icon

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மதியம் 12 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 63 வயதாகும் அவருக்கு எதனால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்று அறிவிக்கப்படவில்லை. மருத்துவமனையில் தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story