முன்னாள் மத்திய மந்திரி சத்யபிரதரா முகர்ஜி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்


முன்னாள் மத்திய மந்திரி சத்யபிரதரா முகர்ஜி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்
x

முன்னாள் மத்திய மந்திரி சத்யபிரதரா முகர்ஜி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.



புதுடெல்லி,


பா.ஜ.க.வை சேர்ந்த பழம்பெரும் அரசியல்வாதி சத்யபிரதரா முகர்ஜி. கடந்த 1999-ம் ஆண்டு கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

மேற்கு வங்காள மாநில முன்னாள் பா.ஜ.க. தலைவராக பதவி வகித்துள்ள அவர், நாடியா மாவட்டத்திற்கு உட்பட்ட கிருஷ்ணா நகர் தொகுதி மக்களுக்காக அயராமல் பணியாற்றியவர். ஜோலு பாபு என பரவலாக அறியப்படும் அவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் எம்.பி. மற்றும் மத்திய மந்திரியாக பதவி வகித்தவர்.

அவர் உடல்நல குறைவு மற்றும் வயது முதிர்வால் நீண்டகாலம் அவதிப்பட்டு வந்த நிலையில், தனது இல்லத்தில் வைத்து காலமானார். அவருக்கு வயது 90. அவரது மறைவுக்கு பிரதமர் மோடி தனது இரங்கல்களை தெரிவித்து கொண்டார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், முன்னாள் மத்திய மந்திரி சத்யபிரதரா முகர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க.வை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றியவர். சட்ட விசயங்களில் மதிநுட்பம் வாய்ந்தவராகவும், சாமர்த்தியசாலியாகவும் திகழ்ந்தவர். அவரது குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன் என்று டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

இதேபோன்று பா.ஜ.க.வின் தேசிய தலைவரான ஜே.பி. நட்டா மற்றும் மேற்கு வங்காள மாநில எதிர்க்கட்சி தலைவரான சுவேந்து அதிகாரி ஆகியோரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து கொண்டனர்.


Next Story