இந்தியாவின் கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கு ஜெர்மனி அரசு அனுமதி


இந்தியாவின் கோவேக்சின்  கொரோனா தடுப்பூசிக்கு ஜெர்மனி அரசு அனுமதி
x
தினத்தந்தி 26 May 2022 9:31 AM GMT (Updated: 26 May 2022 9:32 AM GMT)

கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கு ஜெர்மனி அரசு அனுமதி அளித்துள்ளது

புதுடெல்லி,

கொரோனாவுக்கு எதிராக ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற தடுப்பூசியை உருவாக்கியது. உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டு பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.

பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசி இந்தியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இதன் அவசர பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனமும் அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கு ஜெர்மனி அரசு அனுமதி அளித்துள்ளது.இதனை இந்தியாவுக்கான ஜெர்மன் தூத‌ர் வால்டர் ஜெ லின்ட்னர் தெரிவித்துள்ளார்


Next Story