ஹிட்லரை போல் ஆட்சி... குண்டு வெடிப்பு மையமான மாநிலம் - மேற்கு வங்காளத்தை விமர்சித்த மத்திய மந்திரி அமித்ஷா


ஹிட்லரை போல் ஆட்சி... குண்டு வெடிப்பு மையமான மாநிலம் - மேற்கு வங்காளத்தை விமர்சித்த மத்திய மந்திரி அமித்ஷா
x

இரண்டு நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ள மத்திய மந்திரி அமித்ஷா, பிர்பூரில் மக்கள் மத்தியில் பேசினார்.

கொல்கத்தா,

இரண்டு நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ள மத்திய மந்திரி அமித்ஷா, பிர்பூரில் மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில், 35 இடங்களில் பாஜகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்ற அவர், சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்கான டீசராக அந்த வெற்றி அமைய வேண்டும் என்றார்.

பிரதமர் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க உதவுமாறு கேட்டுக்கொண்ட அவர், மம்தா பானர்ஜியின் ஹிட்லர் ஆட்சி தொடர்வதை பாஜக அனுமதிக்காது என்றார். மேற்கு வங்காளத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் ஊடுருவல், பசு கடத்தல், குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடக்காது என்று தெரிவித்த அமித்ஷா, மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு மேற்கு வங்காளத்தை குண்டுவெடிப்புகளின் மையமாக மாற்றியுள்ளதாக குற்றம்சாட்டினார்.


Next Story