ஏ.ஐ. சேட்டைகள்...! வைரலாகும் "ஸ்கேட்டிங் பாட்டிகள்"


ஏ.ஐ. சேட்டைகள்...! வைரலாகும் ஸ்கேட்டிங் பாட்டிகள்
x
தினத்தந்தி 20 April 2023 7:00 AM GMT (Updated: 20 April 2023 7:02 AM GMT)

ஒவ்வொரு நாளும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய படங்கள் வெளிவருகின்றன.

திருவனந்தபுரம்

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் பயன்பாடு உலகளவில் பெருமளவில் அதிகரித்து வருகிறது. பலர் ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்டு தங்களுக்கு தேவையான பல வேலைகளை சுலபமாக முடிக்க கற்றுக் கொண்டு வருகின்றனர். மேலும் பலர் ஏ.ஐ. டூல்களை கொண்டு தங்கள் கற்பனைக்கு தீனிப்போடும் வகையில் வித்தியாசமான படங்களை உருவாக்கி வருகின்றனர். இவ்வாறு சிலர் உருவாக்கிய படங்கள் வைரலானதோடு, சர்ச்சைகளுக்கும் உள்ளானது.

தாஜ்மஹால் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் படங்கள் சமூக வலைதளங்களில் முன்னதாகவே வைரலானது.

ஒவ்வொரு நாளும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் புதிய படங்கள் வெளிவருகின்றன.

இன்ஸ்டாகிராம் தர்கீப் என்ற ஐடியில் ஆஷிஷ் ஜோஸ் என்பவர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் எடுக்கபட்ட ஒரு சில படங்களை பகிர்ந்து உள்ளார்.

Grandmas Skating' என்ற தலைப்புடன் அந்த படங்கள் பகிரப்பட்டு உள்ளது.அதில் நான்கு படங்கள் உள்ளன. நான்கு படங்களுமே வித்தியாசமான ஆனால் வயதான பெண்கள் ஸ்கேட்டிங் செய்வதைக் போல் உள்ளது.

சில சமயங்களில் பெண்களின் உடை மற்றும் இடத்தின் சிறப்பியல்புகளைக் கவனிக்கும்போது படங்கள் உண்மையானவையா என்று தவறாகப் புரிந்து கொள்ளலாம். படம் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது.

சிலர் கேரளா பெண்களை போன்று சட்டை மற்றும் வேட்டி அணிந்திருந்தனர், மற்றவர்கள் வட இந்தியாவின் கிராமப்புற பெண்களின் உடையை அணிந்திருந்தனர்.

மூன்று நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்தப் படங்களை ஏற்கனவே 1 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.




Next Story