அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட வாலிபர் மீது தாக்குதல்


அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட  வாலிபர் மீது தாக்குதல்
x

அதிக சத்தத்துடன் பாடல் கேட்ட வாலிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பெங்களூரு: பெங்களூரு வித்யரண்யபுரா பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக்(வயது 20). இவர் ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது தனது செல்போனில் அதிக சத்தத்துடன் பாடலை ஒலிபரப்பி கார்த்திக் கேட்டு உள்ளார். அப்போது அந்த ஓட்டலில் சாப்பிட்டு கொண்டு இருந்த 3 பேர் சத்தத்தை குறைத்து வைத்து பாடலை கேட்கும்படி கார்த்திக்கிடம் கூறியுள்ளனர். ஆனால் இதற்கு கார்த்திக் மறுத்ததாக தெரிகிறது.


இதனால் 3 பேரும் சேர்ந்து கார்த்திக்கை தாக்கியதுடன் அவரது செல்போனை பறித்து சென்றதாகவும் கூறப்படுகிறது. அந்த செல்போனின் மதிப்பு ரூ.33 ஆயிரம் ஆகும். இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின்பேரில் வித்யரண்யபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story