பீகார்: இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- வதந்தி பரப்பிய பயணி கைது


பீகார்: இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- வதந்தி பரப்பிய பயணி கைது
x
தினத்தந்தி 22 July 2022 7:35 AM IST (Updated: 22 July 2022 8:14 AM IST)
t-max-icont-min-icon

சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காத நிலையில் அது வதந்தி என்பது விசாரணையில் தெரிய வந்தது.

பாட்னா,

இண்டிகோ நிறுவனத்தை சேர்ந்த விமானம் ஒன்று பாட்னாவில் இருந்து டெல்லிக்கு நேற்றிரவு 8.20 மணிக்கு புறப்பட தயாரானது. அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தார்.

இதையடுத்து விமானம் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார், பயணியின் பையை சோதனை செய்தனர்.

இதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காத நிலையில் அது வதந்தி என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு வதந்தியை கிளப்பிய பயணி கைது செய்யப்பட்டார். அந்த விமானம் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story