நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை - வதந்தியை நம்பி பெட்ரோல் பங்குகளில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்


நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை - வதந்தியை நம்பி பெட்ரோல் பங்குகளில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்
x

ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

ஸ்ரீநகர்,

எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தி உள்ளதால் பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் உற்பத்தியானது, தேவைக்கு அதிகமாக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்று சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவ ஆரம்பித்தன.இந்த தவறான தகவலை நம்பி காஷ்மீரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

ஒவ்வொரு எரிபொருள் நிலையத்திலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.இதனால் நகரின் சில பகுதிகளிலும், பிற இடங்களிலும் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்தன. ஆங்காங்கே, சில சிறிய வாக்குவாதங்கள் ஏற்பட்டன.

இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த மார்க்கெட்டிங் அதிகாரி டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, "அன்பான மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களே, சில்லறை விற்பனை நிலையங்களுக்கு தேவையான பொருட்கள் கிடைப்பது மற்றும் தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்படுகிறது என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.

பீதி அடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இடையூறு இல்லாமல் எல்லா நேரங்களிலும் உங்களுக்குச் சேவை செய்ய நாங்கள் உறுதியளிக்கிறோம்" என்றார்.


Next Story