ஐதராபாத் திஷா என்கவுண்ட்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டது - சுப்ரீம் கோர்ட்டு விசாரணை குழு அறிக்கை


ஐதராபாத் திஷா என்கவுண்ட்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டது - சுப்ரீம் கோர்ட்டு விசாரணை குழு அறிக்கை
x

ஐதராபாத் திஷா என்கவுண்ட்டர் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று சுப்ரீம் கோர்ட்டு விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 29-ந்தே தி ஐதராபாத்தை சேர்நத கால்நடை டாக்டரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொன்றனர். இந்த கொலையில் தொடர்புடைய 4 பேர் டிசம்பர் 6-ந்தேதி போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டனர்.

இந்த என்கவுண்ட்டர் சம்பவம் தொடர்பாக வக்கீல் ஜி.எஸ். மணி உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 3 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெ ற்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமை யிலான ஆணையம் தனது விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கொல்லும் நோக்கில் இந்த என்கவுண்ட்டர் நடத்தப்பட்டுள்ளது. எனவே , ஐதராபாத் திஷா என்கவுண்ட்டர் திட்டமிட்டு வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலை யில் இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆணையத்தின் சார்பில் முன் வைக்கப்பட்ட வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஐதராபாத் திஷா என்கவுண்ட்டர் விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை மனுதாரர்கள், எதிர் மனுதாரர்களுக்கு வழங்க விசாரணை ஆணையத்திற்கு உத்தரவிடுகிறோம். மேலும், இந்த விவகாரத்தை தெலுங்கானா ஐகோர்ட்டு விசாரிக்கவும் உத்தரவிடுகிறோம் என்று கூறியுள்ளனர்.


Next Story